 |
Bishop Message
 |
|
 |
|
ALTERING OUR LIVES
Respected and dear brother-priests, religious and laity,
Some hunters went deep into a dark forest, and found a hut in which a
hermit was praying before a wooden cross. His face shone with happiness.
"Good afternoon, brother."
"May God give us a good afternoon."
"You look very happy."
"I am always happy."
"You are happy, living in this lonely hut, doing penance? We have
everything and are not happy. Where did you find happiness?"
"I have found it here in this cave. Look through that hole and you will catch
a glimpse of my happiness," and he showed them a small window.
"You have deceived us, for all we can see is some branches of a tree."
"Take another look."
"All we see is some branches, and a little bit of sky."
"That," said the hermit, is the reason for my happiness, just a little bit of
heaven.
Therefore happiness lies within us and it is within easy reach of our attitude.
There is little difference in people, but that little difference makes a big
difference. The difference is attitude that is our way of thinking or behaviour.
The big difference is whether it is positive or negative.
It is not what we have or who we are or where we are or what we are doing
makes us happy or unhappy. It is what we think about it. For example, two
people may be in the same place, doing the same thing; both may have an
equal amount of money and prestige - and yet one may be miserable and
the other happy. Why? Because of different mental attitude.
William James says, "The greatest discovery of my generation is
that human beings can alter their lives by altering their attitudes of mind."
I wish you all a Happy New Year
With love, Yours affectionately in our Lord, + F. Antonisamy, Bishop of Kumbakonam |
அச்சம் வேண்டாம்
என் இனிய நண்பர்களே!
கடவுள் நம்மோடு வாழ நம் நடுவே பிறந்திருக்கிறார். நாம் தனியாக இருக்கும்போது ஏதோ ஒருவிதமான பயம் நம்மைப் பற்றிக்கொள்வதை நாம் பல முறை உணர்ந்திருக்கின்றோம்.
திருவிழாக்களில் காணாமல்போகும் குழந்தை தனித்துவிடும்போது அது அழுவதையும், அதன் தாயையோ, தந்தையையோ சந்திக்கும்போது அக்குழந்தை சிரிப்பதையும் நாம் பார்த்திருக்கின்றோம்.
நம்மைவிட ஆற்றல்மிக்க, சக்திமிக்க ஒருவர் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சுவதில்லை.
ஒரு காட்டுக்குள் ஒரு சிங்கம்! அதற்கு ஒரு குட்டி! அதற்கு பல்லும், காலும், வாலும் முளைத்துவிட்டன! அம்மா சிங்கம், இனி உனக்கு நான் உணவூட்ட மாட்டேன்! காட்டுக்குள் சென்று நீயே உன் உணவைத் தேடிக்கொள் என்று சொல்லிவிட்டது!
சிங்கக்குட்டி காட்டுக்குள் சென்றது. அது முதன் முதலில் சந்தித்தது ஒரு பெரிய யானையை! அந்த யானையைக் கண்டு சிங்கக்குட்டி பயந்துவிட்டது! பயந்த சிங்கக்குட்டியை யானை துறத்தத் துவங்கியது! சிங்கக்குட்டி ஓடத்துவங்கியது! குகைக்குள்; தூங்கிக்கொண்டிருந்த அம்மா சிங்கம் எழுந்து வந்தது! பயந்து ஓடிவந்த சிங்கக்குட்டி, அம்மா என்னை ஒருத்தன் துறத்துறாம்மா! என்றது. அம்மா சிங்கம், உன்னைத் துறத்த இந்தக் காட்டில் ஒரு மிருகமா? என்று கேட்டு யானை முன்னால் வந்து நின்றது! அப்போது சிங்கக்குட்டி அம்மா சிங்கத்தின் பின்னால் ஒளிந்து நின்;றுகொண்டு யானையைப் பார்த்து,கிட்டே வாடாப் பார்ப்போம்; என்றது! யானை திரும்பி ஓடத்துவங்கியது!
சிங்கக்குட்டி, யாம்மா என்னைக் கண்டுட்டு துறத்தனான்! உன்னைக் கண்டுட்டு ஓட்றான்? என்றது. அதற்கு சிங்கம், நீ சிங்கக்குட்டிடா! நான் இந்தக்காட்டுக்கு அரசி! உங்க அப்பா இந்தகாட்டுக்கு அரசன்! நம்மை எதிர்க்க இந்தக் காட்டில் யாருமில்லை! நீயும் என்னைப் போல் கர்ஜித்தால் எல்லா மிருகங்களும் ஓடிவிடும்! நீ என்னோடு இருந்தால், நான் உன்னோடு இருந்தால் எந்த மிருகமும் உன்பக்கத்தில் வராது என்றது!
அதுபோலவே அடுத்த நாள் சிங்கக்குட்டி கர்ஜிக்க, எல்லா மிருகங்களும் ஓடி ஒளிந்தன! அது அதற்கு வேண்டிய உணவை உண்டு சுகமாக குகைக்குத் திரும்பியது!
சிங்கத்தைப் படைத்த, மூவுலகாளும் அரசன் குழந்தையாக நம்நடுவே பிறந்து, என் பெயர் எம்மானுவேல் என்று கூறுகிறார். எம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள் (மத் 1: 22-23). கடவுளே நம்மோடு வாழவந்திருக்கும்போது நமக்கென்ன குறை! என்று நாம் வாழத்துவங்குவோம்!
21-ஆம் நூற்றாண்டை ஆட்டிப்படைப்பது அச்சம்! பயம்!
பிறக்கப் போகும் குழந்தைக்குப் பிறப்போமா என்ற பயம்! வளர்ந்த குழந்தைக்கு படிப்பு வருமா என்ற பயம்! படித்தவர்களுக்கு வேலை கிடைக்குமா என்ற பயம்! வேலை கிடைத்தவர்களுக் கூலி கிடைக்குமா என்ற பயம்!
கணவனுக்கு மனைவியைக் கண்டு பயம்! மனைவிக்கு கணவனைக் கண்டு பயம்! பெற்றோர்களுக்கு பிள்ளைகளைக் கண்டு பயம்! பிள்ளைகளுக்கு பெற்றோர்களைக் கண்டு பயம்!
வீடு வீட்டைக் கண்டு பயப்படுகிறது! தெரு தெருவைக் கண்டு பயப்படுகிறது! ஊர் ஊரைக் கண்டு பயப்படுகிறது! நாடு நாட்டைக் கண்டு பயப்படுகிறது!
இயேசு ஆண்டவர், உன்னைவிட்டு விலகவும் மாட்டேன், உன்னைக் கைவிடவும் மாட்டேன், உன்னோடு நான் என்றும் வாழ்வதற்காக உன் நடுவே உன்னைப் போன்ற மனிதராகப் பிறந்துள்ளேன். என்னால் முடியாதது ஒன்றுமில்லை! இதை நம்பு! நம்பி என்னோடு நீயிரு! உன்னை எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றி, வாழ்வாங்கு வாழவைக்கிறேன் என்று நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கூறுகின்றார்.
இந்த வாழ்வுதரும் வார்த்தைகள் புத்தாண்டு முழுவதும் நமது செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கட்டும்!
நம்வாழ்வு வாசகர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர் குழுவினர், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன், + கு. அந்தோனிசாமி, குடந்தை ஆயர்.
|
|
|
 |
|
 |
|

|